Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 05 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான முத்தையன்கட்டுக்குளம், உலக வங்கியின் 586 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் என்.சிறிஸ்கந்தராஜா வியாழக்கிழமை (05) தெரிவித்தார்.
முத்தையன்கட்டுக்குளத்தின் அணைக்கட்டு, வாய்க்கால் என்பவற்றை புனரமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ள இருப்பதால் அதனை விரைந்து புனரமைத்துத் தருமாறு, குளத்தின் கீழ் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பில் பிரதிப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே, அக்குளத்தைப் புனரமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன், கைவசம் இருக்கும் நிதி மூலம் குளத்தின் அணைக்கட்டை புனரமைத்து வான்கதவுகள் இரண்டையும் புதிதாக நிர்மாணிக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே இருக்கும் இரண்டு வான்கதவுகள் புனரமைப்புச் செய்து வான்பகுதியின் கலிங்கை இரண்டடி உயர்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாய்க்காலைப் புனரமைப்பதற்கு மேலதிக நிதி தேவைப்படுகின்ற நிலையில், அந்த நிதி கிடைத்ததும் வாய்க்கால்களும் புனரமைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago