2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அம்பலப் பெருமாள் குளத்துக்கான மின்னிணைப்பு செய்யப்படுகின்றது

Princiya Dixci   / 2015 மார்ச் 05 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் அம்பலப்பெருமாள் குளத்துக்கான மின்னிணைப்பு வேலைகள் இடம்பெற்று வருவதாக துணுக்காய் பிரதேச செயலாளர் சிவபாலன் குணபாலன் வியாழக்கிழமை (05) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

துணுக்காயிலிருந்து தென்னியங்குள சந்தி வரையான மின்னிணைப்பு பூர்த்தியாகிவிட்டது. தற்போது கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள் ஆகிய கிராமங்களுக்கான மின்னிணைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, துணுக்காயிலிருந்து அக்கராயன் செல்லும் வீதியும் துணுக்காயிலிருந்து ஐயன்கன்குளம் வரையான வீதியையும் புனரமைத்துத் தருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .