2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெரியமடுக்குளம் புனரமைப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 05 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மன்னார், மாந்தை மேற்கு பெரியமடுக்குளம் வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்;ட 2 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாக மாந்தை மேற்குப் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவசாய கிராமமான பெரியமடுப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்;கள் விவசாய நெற்செய்கைகளை மேற்கொண்டு வரும் வகையில் பெரியமடுக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.

குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால், கழிவு வாய்க்கால் என்பன புனரமைக்கப்பட்டதன் மூலம் கடந்த 30 வருடங்களாக செய்கை பண்ணப்படாமல் இருந்த 150 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்;ள முடிந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .