Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 05 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஆர்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்
மன்னாருக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய விசேட கூட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் வட மாகாண கடற்றொழில் போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இங்கு மூன்று விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக இந்திய இழுவைப்படகின் அத்துமீறிய வருகையை தடுப்பதற்கான வழிமுறைகள், உள்ளூர் மீனவர்களால் முன்னெடுக்கப்படும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை தடுத்து அதற்கு பதிலாக மாற்று திட்டத்தை முன்னேடுப்பது, தென்னிலங்கை மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துதல் ஆகிய பிரதான மூன்று விடயங்கள் ஆராயப்பட்டதுடன் மேலும் பல விடயங்கள் ஆராயப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் வட மாகாண கடற்றொழில் இணையத்தின் மாவட்டங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் வடகிழக்கு பொது இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசனும் கலந்துகொண்டார்.
மன்னாருக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு மீனவர்களின் பிரச்சினைகளை எடுத்துசெல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago