2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மோசடியில் ஈடுபடும் கிராமிய சங்கங்களுக்கு எதிராக நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 மார்ச் 06 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண போக்குவரத்து மீன்பிடி கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

ஒரு மில்லியன் பெறுமதியில் 25 தையல் இயந்திரங்கள், 06 மாதர் சங்கங்களுக்கான சமையல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (06) வழங்கிய பின்னர், உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்.

கிராமங்களின் அபிவிருத்தியில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் சங்கங்கள் முதன்மையானவை. மக்களுக்காக இயங்க வேண்டும். நிதி மோசடிகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும். எனது அமைச்சுக்கு கிடைத்த 80 மில்லியன் ரூபாய் நிதியை ஐந்து மாவட்டங்களுக்கும் பிரித்து மேற்படி உபகரணங்களை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் நாகையா பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் விநோரோகராதலிங்கம், மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .