2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எனக்கெதிரான முறைப்பாட்டை உடன் விசாரிக்கவும்: ரிஷாட்

Princiya Dixci   / 2015 மார்ச் 06 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

எனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழவில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை உடனடியாக விசாரணை முடிவை நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை (06) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு இணங்கவே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விசாரணைக்கு தான் பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியிடைந்த ஒருவரினாலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .