2025 ஜூலை 12, சனிக்கிழமை

வீடுகளை பெற்று தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 07 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா சூடுவெந்தபிலவு கிராமத்தில் மீள்குடியேறிய மக்கள், தமக்கு வழங்குவதாக கூறிய வீடுகளை தாருமாறு கோரி,  சூடுவெந்தபிலவு பள்ளிவாசலுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (06) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

மீள்குடியேறிய தமக்கு 371 வீடுகள் வழங்க பட்டியலிடப்பட்டபோதிலும் பிரதேச செயலாளரினால் வீடுகள் வழங்கப்படவில்லை எனவும் தமக்கு கிடைக்க வேண்டிய வீடுகளை வேறு கிராமத்துக்கு பிரதேச செயலளார் மாற்றியுள்ளதாகவும் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது பிரதேச செயலாளரையும் கிராம சேவகரையும் இடமாற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை பிரதேச செயலளார் கிராமத்தில் நடத்திய கூட்டத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பியவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, அவர்களை சிறையில் அடைத்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு;பட்வர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (08) இக்கிராம மக்களுடன் அமைச்சர் ரிசாட்; சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் அதன் பின்னர் வீடு கிடைக்காதவிடத்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் தாம் ஈடுபடப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .