2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

Thipaan   / 2015 மார்ச் 07 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் 5 வயது சிறுவன், சனிக்கிழமை (07) கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக  புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியை சேர்ந்த விமலன் அபிஷேக் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த சிறுவனின் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில், தாயார் சமையலில் ஈடுபட்டுள்ளார். சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கையில் தவறுதலாக பாதுகாப்பற்ற கிணற்றினுள் விழுந்துள்ளான்.

உயரிழந்த சிறுவன் குடும்பத்தின் ஒரேயொரு பிள்ளை எனவும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .