2025 ஜூலை 12, சனிக்கிழமை

மல்லாவி வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த ஏற்பாடு

Menaka Mookandi   / 2015 மார்ச் 08 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மல்லாவி பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், ஞாயிற்றுக்கிழமை (08) தெரிவித்தார்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்யும் வைத்தியசாலையாக மல்லாவி வைத்தியசாலை காணப்படுகின்ற போதும் போதிய வசதிகள் இன்றி காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், வடமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு சத்திரசிகிச்சை பிரிவு அமைக்கப்படவுள்ளது. வைத்தியசாலையின் வளங்களை அதிகரித்து, அதனை ஆதார வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல், புதுக்குடியிருப்பு மற்றும் மன்னார் முருங்கன் வைத்தியசாலைகளையும் ஆதார வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .