2025 ஜூலை 12, சனிக்கிழமை

வடமாகாண வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 மார்ச் 10 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துத் தருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனக்கு உறுதியளித்துள்ளார் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார்.

வடமாகாணத்தில் 101 வைத்தியசாலைகள் உள்ளன. இவற்றில் வைத்தியர் எவரேனும் இல்லாத 31 வைத்தியசாலைகள் உள்ளடங்குகின்றன. வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் இந்த 31 வைத்தியசாலைகளையும் மூடவில்லை. ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள வைத்தியர்களை வரவழைத்து சேவைகளை வழங்கி வருகின்றோம் என்று அவர் கூறினார்.

அண்மையில் சுகாதார அமைச்சருக்கும்;; மாகாண சுகாதார அமைச்சர்களுக்கும் இடையேயான கலந்துரையாடலொன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போது, வடமாகாண வைத்தியர் பற்றாக்குறை தொடர்பாக கோரிக்கை விடுத்;திருந்தோம்.

31 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லையென்பதை ஆச்சரியமாகக் கேட்ட சுகாதார அமைச்சர், வைத்தியர்களாக வெளியேறுபவர்களை மேற்படி 31 வைத்தியசாலைகளுக்கும்; தலா ஒருவர் வீதம் இம்மாத இறுதியில் நியமிப்பதாக உறுதியளித்தார் என்று சத்தியலிங்கம் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .