Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 10 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
சிறு கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் சிறு கைத்தொழில் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் விசேட விழிர்ப்புணர்வு செயலமர்வொன்று செவ்வாய்க்கிழமை (10) காலை, மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சிறு கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சுடன் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியன இணைந்து இந்த விழிர்ப்புணர்வு செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த செயலமர்வின் போது 200 சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
கருவாடு உற்பத்தி, உணவு உற்பத்தி, இரசாயன பொருட்கள் உற்பத்தி, பழப்பயிர்ச் செய்கை மற்றும் வீட்டுத்தோட்டம் செய்கை ஆகிய நான்கு துறைகளுக்குள் இக்குழுக்கள் உள்வாங்கப்பட்டு அவர்களின் சுய தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் சிறு கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் கமகே,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago