2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பனை உற்பத்தியை ஊக்குவிக்க உபகரணங்கள் வழங்கி வைப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 10 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் பனை சார் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில் பனை சார் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு மன்னார் மாவட்ட பனை அபிவிருத்தி சபையினால்  தொழில் சார் உபகரணங்கள் இன்று(10) செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தொழில்சார் உபகரணங்கள் சுமார் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

பதநீர் உற்பத்தி, ஒடியல் தயாரித்தல் போன்றவற்றுக்கான உபகரணங்கலே இவ்வாறு வழங்கப்பட்டன.

மன்னார் மாவட்ட பனை அபிவிருத்தி சபையினால் மாவட்ட இணைப்பாளர் பெனில்டெஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கமல்நாதன் விஜிதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு தொழில்சார் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .