2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

25 நெல் மூடைகள் கொள்ளை

Menaka Mookandi   / 2015 மார்ச் 11 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊரியான் பகுதியிலுள்ள விவசாயி ஒருவரின் களஞ்சியசாலையில் இருந்து நெல் மூடைகள், செவ்வாய்க்கிழமை (10) இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் புதன்கிழமை (11) தெரிவித்தனர்.

காலபோக நெற்செய்கையில் அறுவடையை மேற்கொண்ட விவசாயி தனது நெல்லை, வீட்டுக்கு அருகிலுள்ள களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (10) இரவு வாகனத்தில் வந்த கும்பலொன்று களஞ்சியசாலையை உடைத்து, நெல்லை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .