2025 ஜூலை 12, சனிக்கிழமை

கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 மார்ச் 11 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கசிப்பு உற்பத்தி உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்குரிய விசேட செயற்பாடொன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தால் முன்னெடுக்கப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எட்மன் மகேந்திரா புதன்கிழமை (11) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஊரியான், தர்மபுரம் ஆகிய பகுதிகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை என்பன அதிகரித்துள்ளன. இவற்றால் சமூகத்தில் பல பிரச்சினைகளான குடும்ப சச்சரவுகள், கைகலப்புக்கள் என்பவற்றுடன் கொலைகள் கூட இடம்பெற்று வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை தடுத்து நிறுத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு, 24 மணிநேரமும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதனால், கசிப்பு காய்ச்சி விற்பனை  செய்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

தமிழ் தெரிந்த பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சட்டவிரோத செயல்களுக்கு எதிராக தொடர்ந்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .