Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மார்ச் 11 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத், ரொமேஸ் மதுசங்க
இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் புறக்கணிப்பட்டுள்ளதாக தெரிவித்து பிரதேச மக்கள், புதன்கிழமை(11) வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா மாவட்ட பிரஜைகள்குழு மற்றும் மீள்குடியேறியோருக்கான நலன்பேணும் அமைப்பு என்பன இணைந்து இந்த கவனயீர்ப்பு ஆரப்பாட்டததை ஏற்பாடு செய்திருந்தன.
இதன் போது ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
காலை 10 மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பித்து ஏ-9 வீதி வழியாக வவுனியா மாவட்ட செயலகத்தை ஆர்பாட்டக்காரர்கள் சென்றடைந்தனர்.
இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டபோது தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த அரசாங்கம், ஜனாதிபதி செயலணி ஊடாக பாரபட்சமாக வீடுகளை வழங்கியிருந்ததாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்திய பிரதமர் மோடியின் வருகையாவது தீர்வை தருமா, வாழ்ந்த வீட்டையும் இடித்தாய் தந்த வீட்டையும் பறித்தாய், அடிக்காதே அடிக்காதே தமிழர்கள் வயிற்றில் அடிக்காதே, வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழந்துவிட்டோம் என்ற பதாதைகளை தாங்கியருந்தனர்.
மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்ற பிரதேச மக்கள், அரசாங்க அதிபாரிடம் மகஜரை கையளித்தனர்.
குறித்த மகஜரை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தான் அனுப்பி வைப்பதாகவும் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்களையே தன்னால் மேற்கொள்ளமுடியுமே தவிர வேறு எதனையும் செய்யமுடியாது என தெரிவித்த அரசாங்க அதிபர் வீட்டுத்திட்டம் தொடர்பில் கவனமெடுப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான எம். தியாகராசா, ஆர். இந்திரராஜா, ஜி.ரி. லிங்கநாதன் முன்னாள் நகரசபை உபதலைவர் சந்திரகுலசிங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வன்னி அமைப்பாளர் எஸ்.கோவிந்தராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.;
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025