2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கோரி அழுத்தங்களை பிரயோகியுங்கள்: வினோ எம்.பி.

Suganthini Ratnam   / 2015 மார்ச் 11 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான  சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தங்களை பிரயோகியுங்கள்; என்று  கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (10.3) நடைபெற்ற மகளிர் தின நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'நாடாளுமன்ற அரசியலில் பெரும்பான்மையினப் பெண்களின் சார்பில் கணிசமானவர்கள் பங்கேற்கும் வேளையில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பெண்களின் அரசியல் வகிபாகம் மிக மிகக் குறைவாகவுள்ளது. அதேபோல், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்களிலும் தமிழ்ப் பெண்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகவுள்ளது. அதற்கு ஆண்கள் காரணம் என்று சாட்டை கூறமுடியாது. அதற்கும் நீங்களே காரணமாக உள்ளீர்கள்.

பெண் அமைப்புகள் அல்லது பெண்ணியியல்வாதிகள், பெண்களின் உரிமைக்காக போராடுகின்றவர்கள் அல்லது அமைப்புக்கள் வழங்குகின்ற   அழுத்தங்களின் மூலமே அரசியல் அமைப்பில் கூட பெண்களுக்கு கணிசமான ஒதுக்கீட்டை கொண்டுவரமுடியும். இவ்வாறான செயற்பாடு மூலமே  பெண்களின் போராட்டங்கள், புரட்சிகளுக்கு அப்பால், தங்களுக்கான அரசியல் அந்தஸ்தை பெற்று வலுவாக குரல் கொடுக்கமுடியும். அதுவே பெண்களுக்கான போராட்டங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

இன்று வடமாகாணசபையில் இரண்டு பெண்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தாங்கள் சார்ந்துள்ள துறைகளின் மூலம் போராடுகின்றர்கள். ஆனால், அது போதாமலுள்ளது.

உள்ளூராட்சிமன்ற வேட்புமனுவில் 40 சதவீதமானவர்கள் இளைஞர்களது பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதுபோல் பெண்களது பிரதிநிதித்துவத்தையும் கோரவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .