Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 11 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி பாலேந்திரனிடம் அவரது மகள் விபூசிகாவை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஏழு சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று மனுவொன்றை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெயக்குமாரி பாலேந்திரன் கைதானதை அடுத்து அவரது மகளை சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கிணங்க, அச்சிறுமி தற்போது மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது தாயாரிடமே அவரை ஒப்படைக்குமாறு வலியுறுத்தியே நீதிமன்றத்தில் மேற்படி மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, கரைச்சி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு விழா, செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற போது, அதில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த விபூசிகா, 'தனது தாயின் விடுதலைக்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
'எனது அம்மாவையும் என்னையும் கடந்த ஒரு வருடகாலமாக பிரித்து வைத்தனர். பலரது முயற்சியால் எனது அம்மா விடுதலை பெற்றுள்ளார். அவரைக் காண்பதற்கு ஆர்வமாகவுள்ளேன். எனது அம்மா, செவ்வாய்க்கிழமை என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்' என்று விபூசிகா மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago