2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வாழைக்குட்டிகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 11 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தால் நலிவுற்ற தமிழ்ச் சமூகத்தை மீள நிலைநிறுத்தும் வகையில் 'வாழ்வோம் வளம்பெறுவோம்' செயற்றிட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, தேவிபுரம் மற்றும் கைவேலி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு தலா 250 வாழைக்குட்டிகள் புதன்கிழமை (11) வழங்கப்பட்டன.

புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒருவரின் நிதியுதவியில் வழங்கப்பட்ட இந்த வாழைக் குட்டிகளுடன் நீர் இறைப்பதற்கான பைப்புகளும் வழங்கப்பட்டன.

வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த வாழைக்குட்டிகளை பயனாளிகளிடம் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .