Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 11 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயனிலுள்ள ஆசிரிய வளநிலையம் பயன்படுத்தப்படாமல் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றது.
1996ஆம் ஆண்டு கிளிநொச்சியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது கிளிநொச்சி நகரத்தின் அனைத்து அமைப்புக்களும் இடம்பெயர்ந்து அக்கராயனில் இயங்கின. இக்காலத்தில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை, அக்கராயன் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் இயங்கியபோது இவ்வள நிலையம் உருவாக்கப்பட்டது.
அக்கராயனில் மீள்குடியேற்றம் நடைபெற்று 5 வருடங்கள் ஆகின்றன. ஆசிரிய வள நிலையம் மீள்குடியேற்ற தொடக்க காலத்தில் பொலிஸ் நிலையமாக பயன்படுத்தப்பட்டது. தற்போது பற்றைகள் வளர்ந்து இயங்காத நிலையில் காணப்படுகின்றது. இவ்வாசிரிய வளநிலையத்தில் நடத்தப்பட்டுவந்த ஆசிரியர்களுக்கானப் பயிற்சிகள் கிளிநொச்சி நகரிலுள்ள பாடசாலைகளிலேயே நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்காரணமாக பூநகரி கோட்ட ஆசிரியர்கள், அக்கராயன் பிரதேச ஆசிரியர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கிளிநொச்சி நகருக்குச் சென்று பயிற்சிகளைப் பெறவேண்டிய தேவையுள்ளது. இவ்வளநிலையம் இயங்குமானால் மேற்படி பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பெரும் நன்மையடைவார்கள்.
இது தொடர்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேளிடம் கேட்டபோது, 'ஆசிரிய வள நிலையங்களை புனரமைத்துத் தருமாறு முன்னைய அரசாங்கத்தின் கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம். முன்னைய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் மனுவொன்றையும் கொடுத்திருந்தோம். எனினும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை' என்றார்.
அத்துடன், நிதி கிடைத்து திருத்தியமைக்கப்பட்டால் ஆசிரிய வள நிலையத்தை மீள இயங்க வைக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago