2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அக்கராயன் குளத்தை முழுமையாக புனரமைக்க ரூ.1,000 மில்லியன் தேவை

Menaka Mookandi   / 2015 மார்ச் 12 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் குளத்தை முழுமையாக புனரமைப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன், வியாழக்கிழமை (12) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய இரணைமடு குளத்துக்கு அடுத்த பெரிய குளமாக அக்கராயன் குளம் இருக்கின்றது. இதன் கீழ் 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியும். குளத்தின் வாய்க்கால்கள், ஆறு என்பன புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, ஜப்பான் அரசின் 350 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் குளத்தின் அணைக்கட்டு மற்றும் வான்பகுதிகள் என்பன கடந்த 2010ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டன.

குளத்தை முழுமையாக புனரமைப்பதற்கு இன்னும் ஆயிரம் மில்லியன் ரூபாய் தேவை. நிதிக்கான கோரிக்களை விடுத்துள்ளோம். நிதி கிடைக்கின்றபோது குளத்தை முழுமையாக புனரமைக்க முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .