2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மோடியின் மன்னார் விஜயத்துக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Menaka Mookandi   / 2015 மார்ச் 12 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மன்னார் விஜயத்துக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர், எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு தலைமன்னார் துறை புகையிரத நிலையத்துக்கு வருவார்” என்றார்.

“தலைமன்னார் துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைப்பார். அது மட்டுமின்றி தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்துக்கான படகு சேவை ஆரம்பிப்பது குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், இந்திய பிரதமரின் மன்னார் விஜயத்துக்கான சகல அடிப்படை வசதிகளும் பூர்த்தியடைந்துள்ளன. பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், அரசியல்வாதிகள், உயரதிகாரிகளுடன் இவ்விடயம் தொடர்பாக ஏற்கெனவே கலந்துரையாடப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .