Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 12 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மார்க் ஆனந்த், எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் 16ஆவது பொதுக்கூட்டம், இன்று வியாழக்கிழமை (12) ஆயுர்வேத வைத்தியர் செல்வ மகேந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய, சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டி மெல், கௌரவ விருந்தினராக லங்கா சித்தஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அதிபர் டாக்டர் ஜீவகுமார், வட இலங்கை சுதேச வைத்திய சபையின் தலைவர் டாக்டர் விக்னேஸ்வரா, மன்னார் மாவட்ட சுதேச மருத்துவ இணைப்பாளர் டாக்டர் கார்த்திகாயினி, டாக்டர் எஸ்.லோகநாதன், டாக்டர் கதிர்காமநாதன் உட்பட வட மாகாண ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் உரை, அதிதிகள் கௌரவிப்பு, மூத்த சுதேச மருத்துவர்களை கௌரவித்தல், செயற்றிட்டங்கள் தொடர்பான ஆய்வுகள் என்பன இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது. இதில் ஏகமனதாக பழைய நிர்வாக சபை உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது ஆயுர்வேத நிர்வாக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான மருத்துவத்திற்காக அபின் மற்றும் கஞ்சா பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக மாவட்ட செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட செயலாளர் தெரிவிக்கையில், "கடந்த ஆண்டுகளின் ஆயுர்வேத மருத்துவத்துக்காக அபின் கனிசமான அளவு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாண்டிலும் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கு 9 கிலோ அபின் வழங்குவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ள போதிலும் தற்பொழுது கையிருப்பில் அபின் இல்லாததினால் அபின் கிடைப்பது தாமதமடையலாம்" என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
47 minute ago
51 minute ago