2025 ஜூலை 12, சனிக்கிழமை

வாழ்வாதாரத்தை உயர்த்த நிதியுதவி

Menaka Mookandi   / 2015 மார்ச் 12 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் 370 பேருக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மகாலிங்கம் தயாநந்தன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனின் நிதியதவியுடன் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த வாழ்வாதாரக் கொடுப்பணவுகள் இந்த வாரமளவில் வழங்கப்படவுள்ளன.

இதன் மூலம் கோழிக்குஞ்சுகளை கொள்வனவு செய்து அதன் மூலம் தமது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்காக, 10 ஆயிரம் ரூபா வீதம் 370 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .