Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 12 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்குமிடையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் பயனாக குஞ்சுக்குளம் கிராமத்துக்குச் செல்லும் பிரதான பாதை புனரமைக்கப்பட்டு வருவதாக அக்கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
குஞ்சுக்குளம், மாதா கிராமம், பெரிய முறிப்பு ஆகிய 3 கிராமங்களுக்கும் செல்லும் பிரதான வீதி கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சேதமடைந்த நிலையில் இருக்கின்றது.
இதனால் கடந்த 3 மாங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதிகள் இன்றி குறித்த 3 கிராமங்களையும் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் அக்கிராம மக்களுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (07) விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, குறித்த வீதியை புனரமைப்பு செய்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித்தருமாறு அக்கிராம மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். குறித்த வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
வீதி புனரமைப்பு வேலைகளை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், நேரில் சென்று பார்வையிட்டதுடன் குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் பஸ் சேவையை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago