Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2015 மார்ச் 14 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவின் இரட்டை வாய்க்காலிலிருந்து மாத்தளன் வரையான 13 கிலோமீற்றர் வீதியை திருத்துவதற்கான நிதி, பல்வேறு தரப்பினரிடம் கோரியுள்ளதாகவும் நிதி கிடைத்தவுடன் வீதி புனரமைப்புச் செய்யப்படும் என வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதம பொறியியலாளர் வல்லிபுரம் ஜெயானந்தன், வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.
மேற்படி வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் ஆகிய கிராமங்களுக்கான போக்குவரத்துகள் தற்போது நடைபெறுவதில்லையென மேற்படி கிராமங்களின் மக்கள் கூறினர். மேற்படி கிராமங்களில் சுமார் 460 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
தனியார் பஸ்கள், உடையார்கட்டிலிருந்து புதுக்குடியிருப்பு வழியாக மாத்தளன் சந்தியூடாக வவுனியா செல்வகின்றது. ஆனால், முல்லைத்தீவு நகரத்திலிருந்து இரட்டைவாய்க்கால் வழியாக மாத்தளன் வரை எவ்வித போக்குவரத்துகள் நடைபெறுவதில்லை. இதற்கு காரணம் இந்த வீதி புனரமைக்கப்படாமையாகும்.
இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் அதிகளவான மக்கள் பயன்படுத்திய வீதிகளில் ஒன்றாக இந்த வீதி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago