2025 ஜூலை 12, சனிக்கிழமை

கல்வி இராஜாங்க அமைச்சர் வவுனியா விஜயம்

Gavitha   / 2015 மார்ச் 14 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், எதிர்வரும் 28ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் இந்திரன் சஜீந்திரா வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

வவுனியாவுக்கு விஜயம் செய்யும் இவர், வவுனியா மாவட்ட  பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை திறந்து வைக்கவுள்ளதுடன், வவுனியா மாவட்ட கல்வி நிலை தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, தேசிய பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அபிவிருத்தி குழுக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதுடன், வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டையும் வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .