2025 ஜூலை 12, சனிக்கிழமை

மன்னாரில் ஐ.தே.க ஆதரவாளர்களுக்கும் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2015 மார்ச் 15 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (14) சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில், மன்னார் ஆஹாஸ் விடுத்தியில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதில், போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஐ.தே.க.வின் ஆதரவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், மன்னார் மாவட்டத்தில் அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .