2025 ஜூலை 12, சனிக்கிழமை

கசிப்புடன் கைதானவர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2015 மார்ச் 16 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஊரியான் மற்றும் கல்லாறு ஆகிய பகுதிகளில் கசிப்புடன் கைதுசெய்யப்பட்ட பெண் உட்பட இருவருக்கு சுமார் எண்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) கிளிநொச்சி ஊரியான் 2 ஆம் யுனிற் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவரை ஒரு போத்தல் கசிப்புடன் கைதுசெய்தனர்.

மேற்படி நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குற்றவாளிக்கு நாற்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதவான் தீரப்பளித்தார்.

அதேபோன்று, திங்கட்கிழமை (16) கல்லாறுப்பகுதியில் பெண்ணொருவரை 375 மில்லி லீற்றர் கசிப்புடன் கைதுசெய்த மதுவரித்திணைக்கள அதிகாரிகள், குறித்த பெண்ணை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இப்பெண்ணுக்கு நாற்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

இதேவேளை, 375 மில்லிலீற்றர் கசிப்பை உடமையில் வைத்திருந்த ஒருவரை கைதுசெய்த கிளிநொச்சிப் பொலிஸார், மேற்படி நபரை திங்கட்கிழமை (16) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது குறித்த நபரை நாற்பதாயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .