2025 ஜூலை 12, சனிக்கிழமை

வெலிக்கடை சிறையிலிருக்கும் மகனை மீட்டுத்தருமாறு தாய் மனு

Princiya Dixci   / 2015 மார்ச் 17 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இனந்தெரியாத நபர்களினால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் அழைத்து செல்லப்பட்டு, காணாமல் போன நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கின்ற தனது மகனை மீட்டுத்தருமாறு தாயொருவர் மன்னார் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (16), மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மன்னார் பள்ளிமுனைப் பகுதியை சேர்ந்த தனது மகனின் புகைப்படம் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது என்றும் அத்தாய் தனது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (16) தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் தனது மகனும் இருக்கின்றார் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த அன்ரன் சனிஸ்ரன் பிகிராடோ (வயது-24) என்பவர் தனது உறவினர் வீட்டிலிருந்த போது இனம் தெரியாத நபர்களால் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அழைத்துச் செல்லப்பட்ட மகன் வீடு திரும்பாத நிலையில் அவரது தாயார் பொலிஸ் நிலையம் உட்;பட பல இடங்களிலும் முறைப்பாடு செய்திருந்தார்.

சுமார் 07 வருடங்களை கடந்தும் தனது மகன் தொடர்பில் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் தைப்பொங்கல் தினத்தன்று (14-01-2015) வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டோரின் புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் தனது மகனும் இருகின்றார் என்றே அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவை மன்னார் நீதிமன்ற நீதவான் அலெக்ஸராஜா ஆசீர்வாதம் கிறேசியன் ஆராய்ந்தார்.

இதன் போது காணாமல் போன குறித்த இளைஞன் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர் ஏன்? எதற்காக கைதுசெய்யப்பட்டார். தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணம் என்ன? உள்ளிட்ட தகவல்களை பெற்று மன்னார் நீதிமன்றில் சமர்ப்பிக்கும் படி  பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த மனுமீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .