2025 ஜூலை 12, சனிக்கிழமை

டைனமட் பாவித்து மீன்பிடித்த 6 மீனவர்கள் கைது

George   / 2015 மார்ச் 18 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரின் தென்பகுதியான சவுத்பார் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் டைனமட் பாவித்து மீன்பிடித்த  6 மீனவர்களை செவ்வாய்க்கிழமை(17) கைது செய்துள்ளதாக மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், டைனமட் பாவித்து பிடிக்கப்பட்ட சீலா மற்றும் பாரை ஆகிய 600 கிலோகிராம் மீன், இரண்டு கண்ணாடி நாரிழைப்படகுகள் மற்றும் வெளிக்கள இணைப்பு இயந்திரம், மீன்பிடி உபகரணங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன. 

மீன் பிடியில் ஈடுபட்டு கரை திரும்பும் படகுகள் மன்னாரிலுள்ள கடற்படை சோதனைச் சாவடியில் சோதனையிடப்படுவது வழமை. 

இதன் போது படகில் கொண்டு வரப்பட்ட மீன்கள் குறித்து கடற்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, இது தொடர்பில் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை அலுவலகத்துக்கு கடற்படையினர் அறிவித்தனர். 

அங்கு சென்ற மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளால் டைனமட் பாவித்து மீன்கள் பிடிக்கப்பட்டிருந்ததை உறுதிசெய்யப்பட்டு, மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .