2025 ஜூலை 12, சனிக்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா பூந்தோட்டக் கிராமத்தில் நிர்க்கதியற்ற நிலையில் வாழும் மக்களுக்கு சிவன் புதிய தொழிற் சங்கத்தின் பொதுச்செயலாளர் நாயகம் கணேஷ் வேலாயுதம், புதன்கிழமை (18) மனிதாபிமான உதவிகளை வழங்கி வைத்தார்.

சிவன் புதிய தொழிற் சங்கம், மலையத்தில் சிவன் மாற்று வலுவுடையோர் நிலையம் என்ற பெயரில் தன்னுடைய சொந்த நிதியில் பல்வேறு மனிதபிமான உதவிகளை செய்துவருவதுடன் இங்குள்ள மக்களுக்காக உடனடித் தேவையாகக் கருதக்கூடிய ஒரு வாரத்துக்கான உலர் உணவுப் பொதிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. 

அரசி, பால்மா, பருப்பு, சீனி, வெங்காயம், உருளைக்கிழங்கு, சவர்க்காரம், உப்பு உள்ளிட்ட பொருட்களுடன் பாய் மற்றும் படுக்கை விரிப்பு ஆகிய பொருட்களே இவ்வாறு வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .