2025 ஜூலை 12, சனிக்கிழமை

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2015 மார்ச் 20 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வீதி உட்பட அடிப்படை வசதிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வவுனியா மறவன்குளம் மக்கள், பிரதேச சபையின் தலைவர் க.சிவலிங்கத்திடம் மகஜரொன்றை நேற்று வியாழக்கிழமை(19) கையளித்தனர்.

மறவன்குளம் கிராமத்தில் பிரதான வீதி மற்றும் குடிநீர் பிரச்சனைகள் உட்பட பல்வேறு செயற்பாடுகளை வவுனியா தமிழ் தெற்கு பிரதேசசபை செய்து தரவில்லை என தெரிவித்து வவுனியா நெளுக்குளத்தில் உள்ள பிரதேச சபைக்கு முன்பாக கூடியிருந்தனர்.

இந்நிலையில் பிரதேசசபையின் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அக்கிராம மக்கள் தயாரான போது பிரதேசசபையின் தலைவர் க.சிவலிங்கம் மக்களை அழைத்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது கிராமத்தின் சார்பில் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளித்தனர்.

கிராமத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கௌ;வதாக பிரதேச சபை தலைவர் உறுதியளித்ததை தொடர்;ந்து பிரதேச மக்கள் கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .