2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் நகர சபை மண்டபத்துக்கு தனி நுழைவாயில்

Princiya Dixci   / 2015 மார்ச் 20 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர சபை மண்டபத்தை அழகுபடுத்தும் வகையில் மன்னார் நகர மண்டபத்துக்கு செல்ல தனி நுழைவாயில், மன்னார் நகர சபையினால் அமைக்கப்பட்டு, வைபவ ரீதியாக இன்று வெள்ளிக்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நுழைவாயிலை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், நகர சபையின் செயலாளர் லேனாட் லெம்பேட், நகர சபை உறுப்பினர்களான இரட்ணசிங்கம் குமரேஸ் மற்றும் பிரிந்தாவனநாதன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். 

மன்னார் நகர சபையின் செயலாளர் லேனாட் லெம்பேட்டின் முயற்சியின் பலனாகவே குறித்த நுழைவாயில் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .