Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 20 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு அண்மையில் அமைக்கப்பட்ட கிளிநொச்;சி கரைச்சிப் பிரதேச சபையின் பொது நூலகத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனால் இந்த பொது நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சிக்கான பொதுநூலகக் கட்டடம் சர்வதேச விளையாட்டு; மைதானத்துக்காக பெற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து குறித்த நூலகம் பிரதேச சபை வளாகத்தில் உள்ள சிறிய கட்டடம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்;டுகளுக்கு மேலாக இயங்கி வந்ததது.
பொதுநூலகம் அமைப்பதற்கு பாற்பண்ணைக் கட்டடம் அல்லது பழைய மாவட்டச் செயலகத்தின் ஒரு பகுதியை வழங்குமாறு மாவட்டச் செயலாளரிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து 2004 ஆம் ஆண்டு பாற்பண்ணைக்காக அமைக்கப்பட்ட கட்டடம் நூலகத்துக்காக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சி.யோகேஷ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கரைச்சிப் பிரதேச செயலர் கோ.நாகேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
4 hours ago