2025 ஜூலை 12, சனிக்கிழமை

வெளி மாவட்டங்களின் சேவைகளுக்கு புதிய பேருந்துகள்

Princiya Dixci   / 2015 மார்ச் 22 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

இலங்கை போக்குவரத்துச் சபையின் முல்லைத்தீவு சாலைக்கு புதிதாக வழங்கப்பட்ட 12 பேருந்துகளையும் கொழும்பு, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக முல்லைத்தீவு சாலை முகாமையாளர் கே.ஸ்ரீநிவாசன் ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி பகுதிகளுக்கு இதுவரைகாலமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பேருந்துகளை உள்ளூர் சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம். எமது சாலையில் ஆளணி பற்றாக்குறை நிலவுகின்றது. ஆளணியினரைப் பெற்றுத்தருவதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உறுதியளித்தார். ஆளணி கிடைத்தும் சிறந்த சேவையை வழங்கமுடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .