Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 23 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
காணிப் பிணக்குகள் தொடர்பில் வடமாகாணத்திலிருந்து மாத்திரம் 2 இலட்சம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணி ஆணையாளர் ஆர்.எல்.ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 2,045 பேருக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு, கரைச்சி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் பொ.நாகேஸ்வரன் தலைமையில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
'வடக்கில் அதிகளவான காணிப் பிணக்குகள் காணப்படுகின்றன. அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதற்காக விசேட திட்டமொன்றை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
காணி இல்லாதவர்களை தெருவில் நிற்க வைக்க முடியாது. அவர்களுக்கான காணிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும். மக்களின் பங்களிப்புடன் அவற்றைச் செய்து வருகின்றோம்.
முதலில் 20 ஆயிரம் பத்திரங்கள், தொடர்ந்து 15 ஆயிரம் பத்திரங்கள் என வழங்குவதற்கு திட்டமிட்டு 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் காணிப்பத்திரங்களை கொடுப்பதற்கு திட்டமிட்டோம்.
ஆனால் அவற்றை அந்த ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் திட்டத்தை நிறைவேற்றுவோம்.
மத்திய வகுப்புத்திட்டத்தில் குடியேறியவர்களின் காணி தொடர்பான பிரச்சினை பெரிய பிரச்சினையாகவுள்ளது. மத்திய வகுப்புத் திட்டக் காணி உரிமையாளர்களின் காணி உரிமையை ரத்துச் செய்ய முடியாது.
தற்போது அதில் குடியிருப்போருக்கு தீர்வையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது தொடர்பில் காணி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பவர்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
59 minute ago
3 hours ago
4 hours ago