Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 23 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பரவிப்பஞ்சான் பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி தான் முன்னெடுப்பதாகவும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சரிடம், பரவிப்பாஞ்சன் மக்கள் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
மகஜரைக் கையளித்த மக்கள் 'தங்களின் காணியில் இராணுவம் குடியிருப்பதால் தங்களுடைய மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 5 வருடங்களாக நாங்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றோம்' என்று பிரதியமைச்சரிடம் கூறினர்.
'சுமார் 65 குடும்பங்கள் இவ்வாறு இருக்கின்றோம். எங்களுடைய மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்னைய அரசாங்க காலத்தில், அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களிடம் இது தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். எனினும் அது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை' என்றனர்.
அதற்குப் பதிலளித்த விஜயகலா மகேஸ்வரன், 'அரசாங்கத்துடன் கலந்துரையாடி இதற்கு சரியான தீர்வைப் பெற்று, பரவிப்பாஞ்சான் மக்களை அவர்களிடம் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் அதிகாரிகளை தேடிப்போகத் தேவையில்லை. அதிகாரிகள் உங்களை தேடிவந்து சேவையாற்றும் காலம் வரும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago