2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஒலுமடுவில் 228 ஏக்கரில் நெல், எள்ளு செய்கை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 24 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, ஒலுமடு கமநலசேவை நிலையத்துக்கு உட்பட்ட 8 சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 158 ஏக்கரில் நெற்செய்கையும் 70 ஏக்கரில் எள்ளுச் செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக கமநலசேவை நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தச்சடம்பன் குளத்தின் கீழ் 33 ஏக்கரிலும் கற்சிடங்கு குளத்தின் கீழ் 24 ஏக்கரிலும் தருமுறிகண்டி குளத்தின் கீழ் 8 ஏக்கரிலும் பெரிய புளியங்குளத்தின் கீழ் 20 ஏக்கரிலும் இயங்கன்குளத்தின் கீழ் 3 ஏக்கரிலும் புதுமச்சிநாத குளத்தின் கீழ் 20 ஏக்கரிலும் புதுமுறிப்பு குளத்தின் கீழ் 10 ஏக்கரிலும் ஒலுமடுக்குளத்தின் கீழ் 40 ஏக்கரிலும் நெற்செய்கை செய்யப்படவுள்ளது.

எள்ளுச் செய்கையானது ஒலுமடுக்குளத்தின் கீழ் 70 ஏக்கரில் செய்கை பண்ணப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .