Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Thipaan / 2015 மார்ச் 24 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வடமராட்சி சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது, இராணுவ புலனாய்வாளர்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் சம்பவமானது மீனவ சமூகத்தை மீண்டும் மீண்டும் அடக்கு முறைக்குள் கொண்டுவரும் செயலாக காணப்படுவதாகவும் இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இன்று செவ்வாய்க்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், அனைத்து இன மக்களையும் சமத்துவத்துடன் செயற்பட வழிவகுத்துள்ளது. கடந்த கால ஆட்சியில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் புதிய அரசினால் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.
ஆனால், வட பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை. வட பகுதி மீனவர்கள், கடற்படையினரின் சோதனைகளினால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடமராட்சி சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது கடந்த சனிக்கிழமை, இராணுவ புலனாய்வாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மீனவர்கள், இராணுவத்தின் அனுசரனையுடன் அப்பகுதியில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த மீனவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே வடமராட்சி சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இராணுவ புலனாய்வாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
அப்பகுதி மீனவர்களை, இராணுவமும் புலனாய்வாளர்களும் தொடர்ந்தும் அச்சுறுத்துவதாக அந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, வடமராட்சி சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதோடு இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு, தென்னிலங்கை மீனவர்களின் அத்து மீறிய செயற்பாடுகளை தடுக்க கடற்றொழில் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
4 hours ago