2025 ஜூலை 12, சனிக்கிழமை

சமூர்த்தி நிவாரண முத்திரை வழங்கப்படவில்லை என்று மக்கள் விசனம்

Gavitha   / 2015 மார்ச் 25 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மூன்று  கிராமங்களுக்கு சமூர்த்தி நிவாரண முத்திரை, இதுவரை காலமும் வழங்கப்படாது தொடர்ந்தும் தாம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அக்கிராமங்களிலுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த கிராமத்தில் 345 குடும்பங்கள் வாழ்கின்ற போதிலும் கடந்த வருடத்திலிருந்து கிராமத்தில் சிறு குழுக்கள், சமூர்த்தி சங்கங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் மிகவும் ஆர்வத்துடன் சேமிப்புக்களை மேற்கொண்ட வருகின்றனர்.

குமாரபுரம் கிராம சேவகர் பிரிவில் மூன்று கிராமங்கள் உள்ளன. குமாரபுரம், பால்பண்ணை, முறிப்பு ஆகிய மூன்று கிராமங்களே காணப்படுகின்றன. இந்நிலையில் இவ்வருடம் ஜனவரி மாதம் சமூர்த்திக் கொடுப்பனவுகள் வழங்காத கிராமங்களுக்கு புதிதாக சமூர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக,  தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிராமத்துக்கு வரும் அதிகாரிகளும் சமூர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

எனினும் இந்த வருடத்தின் மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பில் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து முல்லைத்தீவு கரைதறைப்பற்று பிரதேச செயலக மகா சங்க முகாமையாளர் எம். தேவகுமாரிடம் வினவிய போது,

'கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படாத கிராமங்களுக்கு புதிதாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி, பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் ஊடாக சம்பந்தப்பட்ட திணைக்களத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் இதுவரை  பதில் எதுவும் கிடைக்கவில்லை. சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படாத கிராமங்களுக்கு கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்' என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .