2025 ஜூலை 10, வியாழக்கிழமை

6 மில்லியன் ரூபாய் செலவில் வீதிகள் புனரமைப்பு

Kogilavani   / 2015 மார்ச் 27 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானாட்டன் பிரதேசத்துக்குட்பட்ட வீதிகள் சுமார் 6 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் பணிப்புரைக்கமைவாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நானாட்டான் உயிலங்குளம் வீதி, நானாட்டான் பொற்கேணி வீதி, நானாட்டான் முருங்கன் வீதி என்பன புனரமைக்கப்படவுள்ளன.

வீதி புனரமைப்பு பணிகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(26) நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  பங்குத்தந்தை, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் அன்புராஜ் லெம்பேர்ட், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .