2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நானாட்டான் பொது விளையாட்டு மைதான வீதி புனரமைப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 27 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான 200 மீற்றர் நீளம் கொண்ட  நானாட்டான் பொது விளையாட்டு மைதான வீதி புனரமைக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை (26) காலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

கடந்த வருடம் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் வழங்கிய நிதியின் கீழ் குறித்த வீதி புனரமைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வீதி, மக்கள் பாவனைக்காக இன்று வியாழக்கிழமை (26) காலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு நானாட்டான் பங்குத்தந்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் லெம்பேட், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று முக்கிய பிரதான வீதிகள் புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் - உயிலங்குளம் வீதி, நானாட்டான் - பொற்கேணி வீதி மற்றும் நானாட்டான் - முருங்கன் வீதி ஆகிய வீதிகளுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் பணிப்புரைக்கமைவாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 06 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வீதிகள் இன்று வியாழக்கிழமை (26) உத்தியோகபூர்வமாக புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நானாட்டான் பங்குத்தத்தை,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் லெம்பேட், பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மன்னார் வவுனியா பிரதம பொறியியலாளர் ரகுநாதன், பிரதேச சபை செயலாளர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .