Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 29 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில்; அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவில் கற்கும் சிறார்கள் யுத்த காலத்தில் பிறந்த சிறார்களே. இவர்கள் விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சிறுவர் பகல் பராமரிப்பு நிலையத்தை சனிக்கிழமை (28) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 86 இலட்சம் ரூபாய் செலவில் பகல் பராமரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த நிலையம் அமைக்கப்படுவதற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும், நாம் பச்சிலைப்பள்ளி கரந்தாயில் அமைப்பதுக்கு சிபாரிசு செய்திருந்தோம். இந்நிலையம் உண்மையிலேயே மிகவும் பொருத்தமான இடத்தில் அமைந்துள்ளது.
இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்றோம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். ஒரு குறுகிய காலத்துக்குள் கரந்தாய் பிரதேசம் புதுப்பொலிவை பெற்றிருக்கிறது. இந்த பகல் பராமரிப்பு நிலையம் இந்த பிரதேசத்துக்கு மிக அவசியமானதொன்று என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago