2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மன்னாரில் நெல் அறுவடை பாதிப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 29 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக நெல் அறுவடை பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது அறுவடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், திடீர் திடீர் என மழை பெய்து வருகின்றமையினால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதோடு அறுவடை செய்யவேண்டிய நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இம்முறை நல்ல நெல் விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள போதும் அதனை அறுவடை செய்ய முடியாது காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, அறுவடை செய்து காயவைத்த நெல் மூடைகளும் மழை நீரில் நனைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .