2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கிளிநொச்சி, முல்லையில் 5 வருட விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்: பிரதமர்

Menaka Mookandi   / 2015 மார்ச் 29 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் விசேட வேலைத்திட்டங்களை மேற்கொண்டு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வடபகுதிக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (29) நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடினார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், 'நாங்கள் நிறைய வேலைகள் செய்ய வேண்;டியுள்ளது. மிகவும் வறிய மாவட்டங்;களாக 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் காணப்பட்டன' என்றார்.

'2014ஆம் ஆண்;டில் மிகவும் வறிய மாவட்டமாக மொனறாகலை மாவட்டம் காணப்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆனால், அனைத்து பிரச்சினைகளும் தீர்வில்லை. நிறைய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இராணுவத்தினரால் மேற்கொள்ளும் சமூக நலன்சார் செயற்பாடுகள் சிவில் சமூகத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும் என இங்குள்ளவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதற்காக சிவில் அமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அடுத்து வரும் 5 ஆண்டுகளில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விசேட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக வடபகுதிக்கான பிரதமர்  உபசெயலகம் ஒன்றை நிறுவி அதன்மூலம் தீர்வு காணப்படும்' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .