Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 மார்ச் 30 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வடக்கிற்கான மூன்று நாள் உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் நேற்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகைத்தந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகளையும் வழங்கி வைத்த பிரதமர், முல்லைத்தீவு மாவட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்த கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஹூனைஸ் பாருக் வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர் , முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அதரிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பகுதியில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி தொழில் செய்வதாக முல்லைத்தீவு மீனவர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர். ஆரம்பத்தை விட தற்போது 250 தென்பகுதி மீனவர்கள் நாயாறு கடற்பகுதியில் மீன்பிடிப்பதாகவும் மீனவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இதன்போது மீனவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும்,1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடவருகைத்தந்திருந்தால் அவர்கள் தவிர அதற்கு பிற்பட்ட காலத்தில் தென்னிலங்கை மீனவர்கள் இங்கு வந்து நாயாறு பகுதியில் மீன் பிடித்தொழில் ஈடுபட்டால் அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதி பொலீஸ் மா அதிபரிடத்தில் பிரதமர் கேட்டுகொண்டார்.
அத்துடன், உள்நாட்டு மீனவர்;களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் பேசவுள்ளதாகவும், தமிழக மீனவர்கள் அத்துமீறி வருவது தொடர்பி;ல் உரிய பொறிமுறையொன்று செயற்படுத்தப்படும். அதேவேளை இழுவை படகுகள் தொழிலாளர்களின் கோறிக்கை தொடர்பிலும் உரிய நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததுடன்,சட்ட விரோத மீனவ வலைகளை கொண்டு மீன்பிடிப்பது தொடர்பில் கடற்றொழில் அதிகாரிகள் உரிய நடவடிக்கையினையnடுக்க வேண்டும் என்று அவர் இங்கு கூறினார்.
அத்துடன், கிளிநொச்சி ,யாழ், உள்ளிட்ட வடக்கில் உள்ள தேசிய பாடசாலைகள் தொடர்பிலும், பிரதேசத்தின் கல்வி சார் நடவடிக்கை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கபடும்.
வடக்கில் ஆசிரிய நியமனங்களை பெறுகின்றவர்கள் 10 வருடங்கள் தாம் நியமனம் பெறும் பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும், இல்லாத விடத்து அது தொடர்பில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் கையகபப்டுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரிடம் தெரிவித்தனர்.
இவ்வாறு இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் மேட்டு மற்றும் வயல்நிலக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டினர்.
அத்துடன், 1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் போன்ற மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேறுவதற்கு காணி, வீடு உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுவதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிரதமரிடம் தெரிவித்தார்.
எனவே, வடமாகாண முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த பிரதமர், முல்லைத்தீவு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அறிக்கையொன்ற சமர்ப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago