2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வடக்கு பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் செயலக அதிகாரி நியமனம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 30 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடக்கிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வசதியாக வடக்குக்கு பிரதமர் செயலக அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பெண் தலைமைத்துவ குடும்பத் தலைவிகளுடனும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுடனும் ஞாயிற்றுக்கிழமை (29) சந்தித்துக் கலந்துரையாடும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், 'போரால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாது உள்ளன. அவற்றை தீர்க்கும் முகமாக பிரதம செயலகத்தால் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்' என்றார்.

யுத்தத்தால் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், விசேட தேவையுடையோர், அங்கவீனமானோர் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு உதவும் முகமாக தேசிய மத்திய நிலையமொன்று, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குப் பொதுவாக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படும்.

பெண்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமானசிங்கம் தலைமையில் குழுவொன்று அமைக்கப்படும். அந்த குழுவின் ஊடாக அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்று பிரதமர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .