Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வட மாகாண சபையினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் இருந்து மன்னார் நகர சபை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இ.குமரேஸ், நேற்று செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015ஆம் ஆண்டுக்கான வட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து, மன்னார் நகர சபை முற்று முழுதாக புறக்கனிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களுக்கும் ஏனைய சபைகளுக்கும் 10 மில்லியன் ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மன்னார் நகரத்தை பொருத்தவரையில் ஒரு மில்லியன் ரூபாய் கூட வழங்கப்படவில்லை. இது வேதனையை ஏற்படுத்துகிறது.
இவ்விடயம் குறித்து மாகாண அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் தமது கவனத்தில் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையை ஏற்படுத்துகின்றது.
தொடர்ந்தும் மன்னார் நகர சபை பல்வேறு வேலைத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் சோலர் மின் விளக்குகளை கொள்வனவு செய்ய ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதிலும் மன்னார் நகர சபை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னார் பாலத்தில் இருந்து தள்ளாடி வரையிலான பகுதிகளில் தெரு மின் விளக்குகள் இல்லாமையினால் மிக இருண்ட நிலையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த சோலர் மின் விளக்குகளுக்கான நிதியினை எமக்கு ஒதுக்கீடு செய்திருந்தால் அதனை கொள்வனவு செய்து குறித்த பகுதிக்கு போட்டிருக்க முடியும்.
ஆனால், குறித்த பகுதி தொடர்ந்தும் இருண்ட நிலையில் காணப்படுகின்றது.
தொடர்ச்சியாக எமது சபைக்கான அபிவிருத்தி பணிகளை மத்திய அரசும் மாகாண அரசும் புறக்கணித்து வருகின்றன.
மத்திய அரசு, கடந்த நான்கு வருட காலப்பகுதியில் எமக்கு ஒதுக்கவேண்டிய எந்தவொரு நிதியையும் ஒதுக்காது செயற்பட்டது.
மன்னார் நகர சபைக்கு வழங்கப்பட வேண்டிய வாகனங்கள் கூட இதுவரை மத்திய அரசினால் வழங்கப்படவில்லை.
யுனைப்ஸ் அமைப்பின் வாகனம் மூலமே பயணங்களை மேற்கொண்டு வந்தோம்.
குறித்த வாகனம் விபத்துக்;கு உள்ளாகியமையால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய புதிய அரசினால் வழங்கப்பட்ட வாகன வழங்கல் நிகழ்வுகளில் கூட மன்னார் நகர சபை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேச சபைகளுக்கு நல்ல வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மன்னார் நகர சபையை பொறுத்தவரை அப்படியான நல்ல வாகனங்கள் வழங்கப்படவில்லை.
மன்னார் மாவட்டத்தில் நகர சபை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மன்னார் நகரம் எவ்வளவு செழிப்பாக இருக்கின்றதோ அதன் அடிப்படையிலே பிரதேசங்களும் அதனை பின் பற்றி வரும் நிலை காணப்படும்.
இந்த வகையில், மன்னார் நகரத்தை முன்னேற்ற முடியாத அளவுக்கு மத்திய அரசும் தொடர்ந்து வந்த மாகாண அரசும் எமது மன்னார் நகர சபையின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என்பது வருத்தமளிக்கின்றது.
தொடர்ந்தும் இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறாமல் எமது மாவட்டத்தில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் இவ்விடயத்தில் கவனமெடுத்து மன்னார் நகர சபையின் அபிவிருத்தி பணிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன் என மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago