Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, விநாயகர்புரம் கிராமத்துக்கான ஏற்றுநீர்ப்பாசனத் திட்ட புனரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதாக விநாயகபுரம் கமக்கார அமைப்பு புதன்கிழமை (01) தெரிவித்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தின் கீழ் சுமார் 6,000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளக்;கூடியதாகவும் 10க்கும் மேற்பட்ட ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்களையும் கொண்ட ஓர் பாரிய குளமாக காணப்படுகின்றது.
1980ஆம் ஆண்டுக்கு பின்னர் யுத்தம் காரணமாக குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத்திட்டங்கள் செயலிழந்;த நிலையில் காணப்பட்டன.
முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் 600 மில்லியன் ரூபாய் நிதியில் வவுனிக்குளம் புனரமைக்கப்பட்டதுடன், அதன் கீழான ஏற்று நீர்ப்பாசனத்திட்டங்களும் அபிவிருத்தி செய்யும் பணிகள் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டன.
விநாயகர்புர ஏற்றுநீர்ப்பாசனத் திட்டமும் இதன்மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டது. விநாயகர்புரம் ஏற்றுநீர்ப்பாசனம் அபிவிருத்தி செய்யப்பட்டமையால், அந்தக் கிராமத்தில் 180 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் சுமார் 130 குடும்பங்கள் பயனடைவார்கள் என கமக்கார அமைப்பு கூறியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago