Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கிடைக்க வேண்டும் என்கின்ற கருத்தியலுக்கு முரண்பாடாக பேரினவாதிகள் வெளியிட்டு வரும் கருத்து, சர்வாதிகாரபோக்கை வெளிக்காட்டுவதாக உள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் வருவதற்கு காலம் கனிந்துள்ள நிலையில் அதனை தடுக்க பேரினவாதிகள் பெரும் பிரயத்தனங்களை எடுத்து வருகின்றனர்.
ஜனநாயகத்தை விரும்பிய தமிழர்கள் கால ஓட்டத்தில் பேரினவாதிகளின் பல்வேறான அடக்குமுறைகளினால் ஆயுத போராட்டத்துக்கு தள்ளப்பட்டு மீண்டும் அகிம்சை வழிக்கு தமிழீழம ஈடுபடுத்தும் நிலை ஏற்றபட்டுபோது போரினவாதிகள் மீண்டும் தமது கட்டுக்கடங்காத செயற்பாட்டை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.
ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு கூட வாய்ப்பில்லையானால் அது ஜனநாயமாக கருத்தப்படாது என்பதே உண்மை.
ஆளுமையும் திறமையும் அரசியல் அனுபவமும் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிரக்கட்சி தலைவர் பதவியை வழங்குவதற்கு பெரும்பான்மை பேரினவாதிகள் தடையாக இருப்பது என்றும் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை என்பதனையும் எத்தீர்வும் தமிழர்களுக்கு கிடைக்காது என்பதனையுமே மறைமுகமாக காட்டி நிற்கின்றது.
இவ்வாறன நிலை தமிழர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையற்றத் தன்மையை உருவாக்கக்கூடிய வாய்ப்புகளுக்கே வழிசமைக்கும் எனவும் தனது அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago